இந்தியாவின் செயல்பாடுகளை கண்டு உலகமே வியக்கிறது..!
இந்தியாவில் இளைய தலைமுறையினரிடம் நேர்மை மற்றும் வேலைகளை நோக்கிய உறுதிப்பாடு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில அரசின் பங்களிப்புடன் 17 வது வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் 70 நாடுகளை சேர்ந்த 3500 க்கும் அதிகமான இந்திய வம்சா வழியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்தந்த துறைகளில் அசாதாரண சாதனைகளை நிகழ்த்தி தங்கள் நாட்டு மன்னனுக்கு மரியாதை செலுத்த வந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் உலக நாடுகளின் தனித்துவமான பார்வை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களால் பலப்படுத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.






