எம்எல்ஏ -வை பளார் என அறைவிட்ட பெண்..!
ஹரியானாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாட்டியா கிராமத்தில் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள நிலையை ஆய்வு செய்ய அந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதால் கோபமடைந்து அந்த பெண் ஒருவர் ஈஸ்வர் சிங்கிடம் போதிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என வாக்குவாதம் செய்துள்ளார். அப்பொழுது ஆத்திரம் அடைந்த அந்த பெண் இப்பொழுது ஏன் வந்தாய் எனக் கேட்டு எம்எல்ஏவை சட்டென்று முகத்தில் அறைந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஈஸ்வர் சிங் கூறியுள்ளார். மேலும் நடந்தது இயற்கை பேரழிவு என்று அந்த பெண்ணிடத்தில் விளக்கியதாக ஈஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.






