அபராதமாக தாலியை கழற்றி கொடுத்த பெண்..!
கர்நாடகாவில் போக்குவரத்து காவலரிடம் பிடிபட்ட பெண் அபராதம் செலுத்த பணம் இல்லாததால் தனது தாலியை கழற்றி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாரதி என்ற பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஹெல்மெட் போடாததால் பாரதியின் கணவரை பிடித்த போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கணவரை மீட்க வேண்டும் என்பதற்காக பாரதி தனது தாலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
தர்ம சங்கடத்திற்கு உள்ளான போலீஸ் அவரிடமே ஒப்படைத்துள்ளனர்.







