கணவரை ஜீவ சமாதி செய்துவிட்டதாக கூறிய மனைவி..!
சென்னை பெரும்பாக்கத்தில் கணவரை ஜீவசமாதி செய்துவிட்டதாக மனைவி கூறிய நிலையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்துள்ளனர். பெரும்பாக்கம் கலைஞர் நகர் எட்டாவது தெருவை சேர்ந்த நாகராஜ் சாமியாடி குறிசொல்லும் தொழிலை செய்து வந்ததாக தெரிகிறது.
அவரது மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவரது தந்தை திடீரென காணாமல் போகவே தாய் லட்சுமியிடம் தீவிரமாக விசாரித்துள்ளார். அப்பொழுது தாய் லட்சுமி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
தந்தை நாகராஜுக்கு கடந்த 17ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அப்போது தன்னை ஜீவசமாதி செய்து விட கேட்டுக்கொண்டதால் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் மகள் தமிழரசி பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.




