--- --:--:-- --

தவறான சிகிச்சையால் தான் கர்ப்பிணி உயிரிழந்ததாக கிராம மக்கள் மறியல்..!

5

ரோடு மாவட்டம் கோபி அருகே பிரசவித்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் அடைந்த நிலையில் அவரது உடலை நேராக மயானத்திற்கு எடுத்துச் சென்றதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

சுண்டக்காலயம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் 28 வயதான மனைவி மைதிலி இரண்டாவது குழந்தை பேருக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

அங்கு கடந்த 20ஆம் தேதி சேர்க்கப்பட்ட அவருக்கு 22ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை இருந்தவரை திடீரென ஆம்புலன்ஸ்சில் ஏற்றிய மருத்துவர் மற்றும் செவிலியர் பெண்ணின் கணவருக்கு தெரிவிக்காமல் கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

கூராய்வு முடிந்த நிலையில் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லாத காவல்துறையினர் நேராக மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் சுண்டபாளையம் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், ரத்த அழுத்தம் இருப்பதாக பிரசவத்திற்கு வரவழைத்து கணவனிடம் தெரிவிக்காமல் அறுவை சிகிச்சை செய்தது.

 

தவறான சிகிச்சை ஆகியவற்றால் மைதிலி உயிரானதாக குற்றம் சாட்டினர். தற்பொழுது நேராக மயானத்திற்கு எடுத்து சென்றது சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி உள்ளதாக கூறி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon