போதை பொருள் விற்பனை செய்த யோகா மாஸ்டர்..!
சென்னை விருகம்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தப்பட்டமைன் பொருட்களை விற்பனை செய்த யோகா மாஸ்டர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிடைத்த தகவலின் பேரில் தியாகராய நகர், துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார் என்பவர் பெங்களூருவில் உள்ள தனது நண்பர் அருண் மூலமாக மெத்தபட்டமைன் போதைப் பொருளை வாங்கி அதை ஆன்லைனில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார், அவரது நண்பர் சாய் பாலாஜி ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






