--- --:--:-- --

அம்மிக்கல்லைப் போட்டு அத்தை மகனைக் கொன்ற மாமன் மகன்

13

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் வாடகை பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அம்மிக்கல்லை போட்டு அத்தை மகனை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரொனா லட்ச கணக்கானோரின் வாழ்வில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை காலி செய்துவிட்டு நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

 

இது தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கும் குடியிருப்பவருக்கும் மோதல் ஏற்படுவதும் தொடர்கிறது. அண்மையில் சென்னை அருகே குன்றத்தூரில் வாடகை தொடர்பான பிரச்சினையில் வீட்டு உரிமையாளரை ஓட ஓட விரட்டி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஆதம்பாக்கத்திலும் வாடகை பிரச்சினையால் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் இது வீட்டு உரிமையாளருக்கும் குடியிருப்பவருக்கும் உள்ள பிரச்சனை அல்ல. வாடகை பணத்தை பிரித்துக் கொள்வதில் அத்தை மகனுக்கும், மாமன் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு. பத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களில் இருந்து வரும் வாடகையை பங்கிட்டுக் கொள்வதில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும் அவரது மாமனாருக்கும் பிரச்சனை இருந்தது.

 

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மீது அம்மிக்கல்லை போட்டு அவர் கொலை செய்துள்ளார் எட்வின். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பணத்தை விட உறவு மேலானது என்பதை இருவரும் உணர்ந்திருந்தால் இந்த பிரச்சினையை ஏற்பட்டிருக்காது.

Leave a Reply

Right Menu Icon