ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் விபரீத முடிவு..!
ஆன்லைன் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு அடுத்த அனுவந்தன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்.
இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. யுவராஜ் – சுபாஷினி தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது செங்கல்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன சர்விஸ் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த யுவராஜ் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது பண தேவைக்காக ஆன்லைன் செய்தி மூலம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தும் படி ஆன்லைன் செயலி மூலம் யுவராஜுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






