மாணவிக்கு 60 காதல் கடிதங்களை கொடுத்து லவ் டார்ச்சர் செய்த ஆசிரியர் கைது..!
அமெரிக்காவில் 11 வயது மாணவிக்கு 60 காதல் கடிதங்களை கொடுத்து லவ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியரை காவலர்கள் கைது செய்தனர். தெற்கு கரோலினாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ராபர்ட் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவர் அந்த பள்ளியில் படித்த 11 வயது மாணவி ஒருவருக்கு தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை கொடுத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து வந்த மாணவி தேவாலயத்திற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவலர்கள் ஆசிரியரை கைது செய்து விசாரித்தனர். மாணவிக்கு காதல் கடிதங்களை கொடுத்து தொல்லை கொடுத்த அவர் கடந்த ஆண்டு சிறந்த ஆசிரியர் என்ற விருது பெற்றார் என்பது குறிப்பிடப்பட்டது.





