--- --:--:-- --

ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்ற மு.க.ஸ்டாலின்..!

3

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகளின் திருமணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகளுக்கு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

 

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் அய்யர் பண்டிகையை பகுதியில் உள்ள ஏ‌ஆர் ரகுமானுக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

மணமக்களுக்கு பசுமை கூடைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். இதே போன்ற பிரபல நடிகை மனிஷா கொய்ராலா, இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்-நடிகைகள் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

Right Menu Icon