--- --:--:-- --

காதலிப்பதாக கூறி ஏமாற்றிய ஆசிரியர்..!

11

ராமநாதபுரத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக தனியார் பள்ளி ஆசிரியரும், உடந்தையாக இருந்ததாக அவரது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராமநாதபுரம் சக்தி நகரை சேர்ந்த சௌமியா என்ற அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபொழுது ஷேக்முகமது அவனது தாய் தந்தை அவளது மாமன் என குடும்பமே சேர்ந்து மிரட்டினர் என்றும் குறிப்பிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

இந்த கடிதத்தின் அடிப்படையில் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon