பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..பெற்றோர்களை பதற வைத்த சிசிடிவி..!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பள்ளி மாணவனின் தலைமுடியை பிடித்துக் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில் வகுப்பறையில் உட்புறம் வந்து மாணவனை இழுத்துச் சென்ற ஆசிரியர் கரும்பலகையில் மாணவனை முட்ட செய்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தனியார் பள்ளியின் ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






