மாணவியை மாடியில் இருந்து தள்ளிய ஆசிரியை..!
டெல்லியில் உள்ள பிரதீப் வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவியை கத்திரிக்கோலால் அடித்து தாக்கிய ஆசிரியர் அந்த சிறுமியை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட வீடியோ காட்சி வெளியானதை எடுத்து கீதா தேஷ்வான் என்ற ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியை, மாணவியை அடித்து கீழே தள்ளிவிடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வைரலாக பரவியுள்ளது.





