எம்எல்ஏவுக்காக காத்திருந்த மாணவிகள் வெயிலில் காத்திருந்ததால் மயக்கம்..!
சேலத்தில் மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ வுக்காக காத்திருந்த மாணவிகள் பலர் வெயிலில் மயங்கி விழுந்தனர். சேலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குவதற்கு அறிவிக்கப்பட்டது.
மிதிவண்டிகளை வாங்குவதற்கு காலை 9 மணிக்கு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்தனர். ஆனால் பல மணி நேரம் தாமதம் ஆன நிலையில் சட்டப்பேரவை உறுப்பினரை வரவேற்பதற்காக மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வெயிலை பொறுக்கமுடியாத பல மாணவிகள் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.





