--- --:--:-- --

படியில் தொங்கியபடி சென்ற மாணவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு..!

8

ஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேல்வழுத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் இலக்கிய ராஜா. இவர் கும்பகோணத்திலுள்ள அரசு ஆண்கள் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

 

காலை மேலூரிலிருந்து தனியார் பேருந்தில் படியில் தொங்கியபடி கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். கும்பகோணம் தியேட்டர் அருகே வந்த தனியார் பேருந்து தவறான பாதையில் சென்று உள்ளதால் அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பலகை தொங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியுள்ளது.

 

இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த இலக்கிய ராஜாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட சகபயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இலக்கிய ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

அவர் உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது நண்பர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர். இலக்கிய ராஜாவின் பெற்றோர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் தனது மகன் உயிரிழந்து விட்டதாக கூறுகின்றனர்.

 

மேலும் இலக்கிய ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லவிடாமல் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மாணவரின் பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

இந்த சம்பவத்தால் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon