--- --:--:-- --

நடிகை ஷகீலா மீது தாக்குதல் நடத்திய வளர்ப்பு மகளால் பரபரப்பு..!

2

டிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியதாக கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ஷகீலா பிரபலமானவர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஷகீலா.

 

யூடியூப் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தகக்கது. இந்த நிலையில், தனது அண்ணன் மகளான ஷீத்தல் என்பவரை நடிகை ஷகிலா வளர்ப்பு மகளாக, வளர்த்தார்.

 

இதனிடையே ஷகிலா மற்றும் ஷீத்தல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷீத்தலின் தாய் சசி மற்றும் சகோதரி ஹமீலா ஆகியோருடன் இணைந்து நடிகை ஷகிலாவை ஷீத்தல் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக, ஷீத்தல் மீது வழக்கறிஞர் சவுந்தர்யா கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon