அறிவுரை கூறியதால் தாயை அடித்துக் கொன்ற மகன்..!
புத்திமதி கூறியதால் போதையில் இருந்த மகன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் வட்டம் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் இவர் மது போதையில் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் முத்துராஜ் சமாதானம் செய்த தாய் பழனியம்மாள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபுத்திமதி கூறியுள்ளார்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் முத்துராஜ் ஆத்திரத்தில் அருகிலிருந்த கடப்பாறையை எடுத்து தாய் என்றும் பாராமல் பலமாக தாக்கியுள்ளார். இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முத்துராஜை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.






