--- --:--:-- --

போருக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை..!

11

ரண்டு வருடங்களுக்கு முன் வந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் லப்பர் பந்து. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஸ்வாசிகா. அந்த ஒரே படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதற்கு பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. குறிப்பாக அவர் நடித்த மாமன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

சமீபத்தில் இஸ்ரேல் – இரான் போர் காரணமாக அரபு நாடுகளிலும் கடும் பதற்றம் நிலவியது. இரான் தாக்குதல் நடத்திய காரணத்தால் துபாய் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.

 

அபுதாபில் இருந்த நடிகை சுவாசிகா நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்திருக்கிறார். தற்போது விமானம் மூலமாக நாடு திரும்பி இருக்கும் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.

 

அங்கு பதற்றம் அதிகமாக இல்லை. ஆனால் நான் வேறு நாட்டவர் என்பதால் இயல்பாகவே அதிகம் பயம் ஏற்பட்டது. விமான நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது என நடிகை சுவாசிகா தெரிவித்து இருக்கிறார்.

Right Menu Icon