செல்வந்தர்கள் ஏழைகளுக்கு உதவ முன் வர வேண்டும்!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 21 நாளில் கொரொனாவை விரட்டி அடிக்க அனைவரும் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி இந்த இக்கட்டான தருணத்தில் ஏழைகளுக்கு உதவ செல்வந்தர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி அவர்களை விரட்டியடிக்க அனைவரும் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வதந்திகளை நம்பி கொரொனாவுக்கு சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய செல்வந்தர்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்த பிறகு பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது, அதை போல் கொரொனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் 21 நாட்கள் போரிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.







