ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து சாதனை படைத்த நபர்..!
இங்கிலாந்தில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து ஒரு நபர் சாதனை படைத்துள்ளார். ஜான் பிரிங் என்ற 34 வயதான நபர் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து கடலில் குதித்தார்.
பேராஷூட் உதவியின்றி இவ்வளவு உயரத்தில் இருந்து ஒருவர் கடலில் குதித்தது உலகில் இதுவே முதன்முறை. எனினும் இவர் கடலில் குதிக்கும் போது ஆபத்து ஏதும் ஏற்பட்டால் உடனே மீட்டு காப்பாற்ற காப்பாற்ற ஒரு குழு தயாராக காத்து இருந்தது குறிப்பிடத்தக்கது உயரத்தில் இருந்து கடலில் குதிக்க 18 மாதங்கள் பயிற்சி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடலில் சாகசங்கள் புரியும் இவர் பறக்கும் மீன் என்றும் அழைக்கப்படுகிறார்.







