--- --:--:-- --

அதிபர் மாளிகையின் கதவை உடைத்த போராட்டக்காரர்கள்..!

4

மெக்சிகோவில் அதிபர் மாளிகையின் கதவு உடைக்கப்பட்ட நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மாயமான 43 மாணவர்களுக்கு நீதி கேட்டு மெக்சிகோவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக அதிபர் மாளிகையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒரு காரில் வந்த இளைஞர்கள் அதிபர் மாளிகையின் கதவை அடித்து உடைக்க முற்பட்டனர். அதற்கு ஒரு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியதும் அங்கிருந்து அவர்கள் ஓடினர்.

 

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது குறித்து மெக்சிகோ அதிபர் கதவு உடைக்கப்பட்ட நிகழ்வை பெரிதாக வேண்டாம் என கூறினார். வெறும் கதவு தான் அதனை சீர் செய்து விடலாம் எனக் கூறியவர் வன்முறையை தூண்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

 

Right Menu Icon