--- --:--:-- --

மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

9

ரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் ஆசிரியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 12-வது நாளான நேற்று ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.

 

ஆசிரியர்கள் தங்கள் வழக்கமான கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். பள்ளி நேரம் முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது,” என்று உறுதியளித்தார்.

 

ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று ஆசிரியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.

Right Menu Icon