--- --:--:-- --

அதிகாரம், ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் : பிரவீன் சக்கரவர்த்தி

7

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும், அதனை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். சில எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அதே வேளையில் ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளி விடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

 

கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும் எனவும், எங்களுடையது ஜனநாயக கட்சி என்பதால் யார் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் நான் சினிமாவில் இல்லை அதை தெளிவுப் படுத்திக் கொள்கிறேன் என்றும் தவெக தலைவர் விஜயை சந்தித்தேன் அதை தாண்டி எதுவும் கூற விரும்பவில்லை என கூறியதுடன், விஜயை சந்தித்தது போல டெல்லியில் பலரையும் நான் சந்திக்கிறேன் பிரவீன் சக்கரவர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது மட்டும்தான் அடையாளமா? வேறு அடையாளங்களே இல்லையா? என்றும் தனிப்பட்ட முறையில் இரு நபர்கள் சந்திக்க கூடாதா ? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக இதை கேட்கிறீர்கள் ?? என்றும் கேள்வி எழுப்பினார்.

 

இதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு களத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை நேரடியாகவே காண முடிவதாகவும் அது ஓட்டாக மாறுமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர் எனவும் கூறிய அவர்,விஜயை மக்கள் நடிகராக பார்க்க வரவில்லை அரசியல்வாதியாக தான் பார்க்க வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டார். விஜய் ஒரு சக்திதான் அதனை யாரும் மறுக்கவே முடியாது என்றும் தமிழ்நாட்டில் விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகி விட்டார் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

Right Menu Icon