--- --:--:-- --

திமுக ஆட்சியில் ஓராண்டில் 4 முறை ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு..!

1

மிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பச்சை நிற பால் பாக்கெட்டைகள் விநியோகம் குறித்து குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன்  தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்கு முறை ஆவின் பொருள்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் வினியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் தட்டுப்பாடு பொதுமக்கள் தனியாக நிறுவன பாலை நாடி செல்லும் சூழலை உருவாக்கி உள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon