கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்..!
வாலாஜாபேட்டையில் கடைக்கு நூடுல்ஸ் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடை உரிமையாளரான 75 வயது சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் போன் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சிவலிங்கம். 75 வயது சாமியார். ஆனால் இவர் தனது கடைக்கு முதலில் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால் கோபமடைந்த பெற்றோர் கடைக்கு வந்து வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.





