16 வயது சிறுமியிடம் அத்துமீறி கருவை கலைத்த காவலர் கைது..!
திருச்சி அருகே 16 வயது சிறுமியிடம் அத்துமீறி சட்டவிரோதமாக கருவை கலைத்த காவலர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி தன் உறவினர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே திருச்சி அரசு மருத்துவமனையில் போலியான ஆவணங்களை வைத்து சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் கல்லகுடி காவல் நிலைய காவலர் மீது குற்றம் உறுதியான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.





