செவிலியரை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய போலீஸ்..!
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி செவிலியரை ஏமாற்றிய முதல் நிலை காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தில் சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இளம் பெண் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து தற்பொழுது செவிலியராக பணியாற்றி வருகிறார்.
10 மாதத்திற்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் தம்பி துறையுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக நெருக்கமாக பழகிவிட்டு தற்பொழுது திருமணம் செய்ய மறுப்பதாக தம்பிதுரை மீது வளசரவாக்கம் காவல் உதவி ஆணையரிடம் அந்த பெண் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம் பெண்ணை காவலர் தம்பிதுரை ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





