சென்னையில் ராகிங் கொடுமை.. மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கி துன்புறுத்தல்..!
சென்னையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சீனியர் மாணவர்கள் கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொரியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தோழியை விமான நிலையத்தில் விடுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இவர்களை பின்தொடர்ந்து வந்து அதே கல்லூரியில் படிக்கக்கூடிய சீனியர் மாணவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் தோழியை அனுப்பிவிட்டு மாணவரை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவரை நிர்வாணப்படுத்தி தாக்கியும் அதனை சீனியர் மாணவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இதன்பின் மாணவரை மிரட்டி பத்தாயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் கல்லூரி மாணவர் தலை முடியை வெட்டி ராகிங் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில் சென்னையில் அதே பாணியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.





