--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களோடு வீடியோ வெளியிட்ட இளைஞரை கைது செய்த போலீசார்..!

10

தென்காசி மாவட்டம் அச்சம் புதூரில் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அச்சம் புதூர் மணக்காடு தெருவை சேர்ந்த சதீஷ் என்ற இருபது வயது இளைஞர் ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ பதிவை அறிந்த காவல்துறையினர் சதீஷ் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இளைஞர்கள் ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Right Menu Icon