--- --:--:-- --

ஹிஜாப் அணியாமல் செஸ் ஆடிய வீராங்கனை நாடு திரும்பக் கூடாது என்று மிரட்டல்..!

7

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை நாடு திரும்பக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராகனை சாரா கலந்து கொண்டார்.

 

அவர் போட்டியில் ஈரான் அரசின் சட்டத்தை மீறி ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஈரானில் வசிக்கும் சாராவின் பெற்றோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

சாரா ஈரான் நாட்டுக்கு திரும்பி வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாரா வேறு நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

 

Right Menu Icon