--- --:--:-- --

கேலோ இந்தியா போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை..அதிர்ச்சி சம்பவம்..!

8

திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டில் வீராங்கனை ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு மைதானம் உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது.

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

 

கயிறு, மலை, கம்பம் பிரிவில் விளையாடிக் கொண்டிருந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 15 வயது வீராங்கனை நந்தினி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Right Menu Icon