தன்னை போலீஸ் எனக்கூறி ஏமாற்ற முயற்சித்த நபர்..!
கோவையில் போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற நபர் உண்மையான போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கோவையில் உணவகம் நடத்தி வரும் மூர்த்தி மற்றும் துரைசாமி ஆகியோரை ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் என்றும், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் மது விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
அப்பொழுது துரைசாமி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு விரைந்து வந்த மர்மநபர் மீது சந்தேகமடைந்த துரைசாமி போலீசிடம் கூறி அவர்களை கையும் களவுமாக பிடித்தார். விரைந்து வந்த நிஜ போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சேகர் என்பதும், பலரை இதுபோன்ற மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது.





