மூன்று சகோதரிகளின் முகங்களில் ஆசிட் வீசிய நபர்..!
உத்திரபிரதேச மாநிலம் ஹோண்டா பகுதியில் மூன்று சகோதரிகளின் முகங்களில் ஆசிட் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மூன்று தலித் சிறுமிகள் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் முகத்தில் அமிலத்தை வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் மூத்த பெண் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த போலீசார் தப்பியோட முயற்சித்தவனை சுட்டு காயப்படுத்தி கைது செய்தனர். மூன்று சகோதரிகளில் மூத்தவள் ஆன 17 வயது பெண்ணை ஒருதலையாக விரும்பியதாகவும் அதை அந்தப் பெண் ஏற்காததால் கோபத்தில் ஆசிட் வீசிய தாகவும் போலீசார் தெரிவித்தனர்.






