தான் ஒரு பெரியார்வாதி என குறிப்பிட்ட குஷ்பூ..!
பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தாமும் பெரியார் கொள்கை வாதி தான் என தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண்களின் உரிமைக்காகவும் பட்டியலின மக்களின் மீதான கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் பெரியார் என தெரிவித்தார்.
பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவரும் என்றும்,தானும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெரியாரின் அனைத்து கொள்கைகளுக்கும் தலையாட்ட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






