--- --:--:-- --

நாளை ஹரியானா வந்தடையும் ஐந்து ரஃபேல் ரக போர் விமானங்கள்..!

11.1

இந்தியாவிடம் ஒப்படைக்கபட்ட ஐந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் நாளை ஹரியானா வந்தடைகின்றன. சீனாவுடனான எல்லைப் பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படும் நிலையில் இந்த விமானங்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலாவது தொகுப்பாக 5 ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானங்கள் இந்தியா வந்தடைகின்றன.

 

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஐந்து ரஃபேல் போர் விமானங்களும் விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்படுகின்றன. ஐந்து விமானங்களில் மூன்று விமானத்தில் ஒற்றை இருக்கையும், இரண்டு விமானங்களில் இரண்டு இருக்கைகளும் உள்ளன.

 

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பு என்னவென்றால் எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பு கொண்டது என்றும், அசாத்திய வேகமும் இதனைக் கண்டறிவது, தாக்குவதும் மிகவும் சவாலானது எனவும் கூறப்படுகிறது.

 

ரஃபேல் விமானங்கள் மூலம் எல்லா நாடுகளும் நம்மை கண்டு அஞ்சுவது மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்பு மேம்படும் என்கிறார் முன்னாள் விமானப்படை அதிகாரி கர்னல் தியாகராஜன். எஞ்சிய விமானங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் வந்து சேரும் என விமானப் படை தெரிவித்துள்ளது.

 

இந்த விமானங்களை கையாளுவதற்கான இந்திய விமானப்படை விமான குழுவினர் தரை கட்டுப்பாட்டு மைய அலுவலர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவுடன் எல்லையில் பதற்றம் மிகுந்து காணப்படும் நிலையில் இந்த விமானங்களை இந்தியா முன்கூட்டியே பிரான்சிடம் இருந்து கேட்டு வாங்கி உள்ளது. இந்த விமானங்கள் சீன எல்லையை ஒட்டியுள்ள விமானப் படைத் தளங்களில் நிறுத்தப்படும் என்றும் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon