அரிசி கடையில் நூதனமாக அரிசி மூட்டைகளை திருடி சென்ற நபர்..!
கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரத்தில் அரசு கடைக்காரரை ஏமாற்றி நூதன முறையில் அரிசி முட்டைகளை திருடி சென்ற நபர் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ராயர் டிரெடர்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த கடைக்கு வந்த மர்ம நபர் தனக்கு 5 அரிசி மூட்டைகள் வேண்டும் என கேட்டுள்ளார்.
அரிசி மூட்டைகளை வீட்டில் வந்து கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு அவன் கூறியதை நம்பி இரண்டு முட்டைகளைபதிவு எண் இல்லாத அவனது இரு சக்கர வாகனத்தில் வைத்து அனுப்பிவிட்டு மூன்று முட்டைகளை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கடை உரிமையாளர் பின் தொடர்ந்துள்ளார்.
ஆனால் உரிமையாளருக்கு போக்கு காட்டிவிட்டு மர்ம நபர் அதி வேகமாக சென்று அவரது கண்களிலிருந்து மறைந்துள்ளார்.






