--- --:--:-- --

வயிற்று பிரச்சினை காரணமாக 6 மணி நேரம் கழிவறையில் இருந்த நபர் பணி நீக்கம்..!

10

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியரை பணி நீக்கம் செய்வதே சரியான தீர்ப்பு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவை சேர்ந்த வாங் என்ற நிறுவனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

 

பின்னர் 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமனம் செய்தது. வயிற்று பிரச்சனை காரணமாக அவர் பல மணி நேரம் கழிவறையில் உட்கார்ந்து இருந்த நிலையில் இதனால் வேலை நேரத்தின் ஆறு மணி நேரத்தை கழிவறையில் கழித்ததாக தெரிவித்தார்.

 

அதன் காரணமாக அவரை வேலையில் இருந்து அந்நிறுவனம் அதிரடியாக நீக்கியது. இந்நிலையில் வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது என்றும் ஆறு மணி நேரத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால் எந்த நிறுவனம் தான் ஒரு ஊழியரை தொடர்ந்து வேலையில் அமர்த்தும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது,

 

Right Menu Icon