--- --:--:-- --

பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று புகாரளித்த நபர்..!

4

கிணற்றை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்த சினிமா காட்சி போன்ற ருசிகர சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றது. பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று ஒருவர் அளித்த புகாருக்கு அந்த மாநில முதல்வரின் மகனுமான ராமாராவ் பதிலளித்துள்ளார்.

 

ட்விட்டர் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பெயர் பெற்றுள்ளார் ராமராவ். அவரை டேக் செய்து இளைஞர் ஒருவர் வெளியிட்ட பதிவில் சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று கூறியிருந்தார்.

 

அதற்கு பதில் பதிவிட்டுள்ள அமைச்சர் இதற்கு என்ன பிரதர் என்னை ஏன் கோர்த்து விட்டீங்க, நான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இது தெலுங்கானாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon