திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய நபர்..!
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை யில் திருமண நிகழ்ச்சியில் உறவினரை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றவரை புகைப்படங்களை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருமண மண்டபம் ஒன்றில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் தங்களின் மொய் பணத்தை மேடையில் அருகில் இருந்த உறவினரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மொய் பையை வாங்கிக்கொண்டு உறவினரை சாப்பிட அனுப்பிய நபர் சிறிது நேரத்தில் மொய் பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து திருமண வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






