ஆந்திராவில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.பதின் வயதுடைய 6 சிறுவர்கள் வசந்தவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ஆற்றில் குளிக்கப் போன போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைக் கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மீட்புப்படையினர் நீண்ட நேரம் போராடி 6 பேர் இறந்த உடல்களை மீட்டனர். ஆந்திர மாநில ஆளுநர் ஹரிச்சந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.






