--- --:--:-- --

அமேசானில் லேப்டாப் ஆர்டர் போட்டவருக்கு வந்த கடப்பாக்கல்..!

8

சென்னையில் அமேசானில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் போட்டவருக்கு கடப்பாக்கல் வந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கடப்பா வடபழனியை சேர்ந்த கிஷோர் கிருஷ்ணா அமேசானில் ஆசை ஆசையாக லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார்.

 

ஆனால் அவருக்கு நவம்பர் 18ஆம் தேதி லேப்டாப்புக்கு பதிலாக கடப்பாக்கல் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை பிரித்து பார்த்த கிஷோர் amazon சேவை மையத்தில் புகார் தெரிவித்ததாகவும் நான்கு நாட்களில் விசாரித்து பதில் சொல்வதாக கூறி 11 நாட்கள் இழுத்தடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

இறுதியில் உங்கள் பக்கம் தான் மிஸ்டேக் என கூறிய பணத்தை திருப்பி தர முடியாது என அமேசான் தரப்பில் சொல்லப்பட்டு விட்டதாகவும் இதனால் மனமுடைந்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

பார்சலை பிரித்தபொழுது எடுத்த வீடியோவை கூட அமேசான் தரப்பு கேட்கவில்லை என கூறும் கிஷோர் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆன்லைனில் ஆசையாக லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு கடப்பாக்கல் அனுப்பப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரப்பை பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon