போலீஸ் போல நடித்து ரூ.3 லட்சத்தை சுருட்டிய கும்பல்..!
மதுரையில் போலீஸ் போல நடித்து ரூ.3 லட்சத்தை பறித்து சென்று கும்பலை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுப்பிரமணி சிவசுப்பிரமணியம் என்பவரிடம் முத்துக்குமார் காரில் இருந்தவாறு விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த இரண்டு பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு காரை சோதனை செய்தனர். இதனால் பயந்தது போல் நடித்த முத்துக்குமார் பணப்பையை வாங்கிக்கொண்டு அங்கு தயாராக இன்று இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டார்.
ஏமாற்றப்பட்டதை அறிந்து சிவசுப்பிரமணி பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணத்தைப் பறித்த முத்துக்குமார், பாலசுப்பிரமணியன், அழகேசன் ஆகியோரை கைது செய்து பணத்தை மீட்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்ட போலீசாரை காவல்துறை ஆணையர் பாராட்டினார்.





