விஜய் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபர்..!
நடிகர் விஜய் தமிழ் சினிமா தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு முன்னணி பிரபலம். இவரது வீடு நீலாங்கரையில் உள்ளது, விஜய்யின் அலுவலகமோ பனையூரில் இருக்கிறது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், தற்போது அலுவலகத்தில் ஒரு பரபரப்பான விஷயம் நடந்துள்ளது. விஜய் தனது அலுவலகத்தை பெயின்ட் செய்ய முடிவு செய்திருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வந்திருக்கிறது. நேற்று பிரபாகரன் என்ற பெயிண்டர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பாமல் மது அருந்த சென்றுள்ளார்.
மது அருந்தியதும் அப்போதும் வீட்டிற்கு செல்லாமல் விஜய் அலுவலகத்திற்கே வந்துள்ளார். அங்கு சிலர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களது உணவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.அப்போது என்ன ஆனது என்பது தெரியவில்லை, காலையில் பார்க்கும் போது அந்த நபர் கையிலும், வாயிலும் பரோட்டா இருக்க இறந்த நிலையில் உள்ளார்.தற்போது அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






