பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய நபர்..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே விபத்து நேரிடாமல் தடுக்க அரசு பேருந்து ஓட்டுனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். சௌராபுரம் பிரிவில் பேருந்து வந்ததை கவனிக்காத நபர் மிதிவண்டியில் சாலையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதனை கண்ட பேருந்து ஓட்டுனர் பேருந்து லாவகமாக திரும்பியதால் மிதிவண்டியில் சென்றவர் நூலிழையில் உயிர்தப்பினார். இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன.





