15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட குழந்தையோடு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குளச்சலில் உள்ள ஒரு கோயிலில் பரிகார பூஜை செய்து வரும் ராஜேஸ்வரன் என்ற சாமியாரை பார்க்க சென்றுள்ளார்.
குழந்தைகளுக்கு பரிகார பூஜை என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி தாயாருக்கு பரிகார பூஜை செய்த சாமியார் அவளை மனைவியாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்ததும் அவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
ராஜேஷ்வரன் போலி சாமியார் என ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்ட அந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.






