சோறு தண்ணி இல்லாமல் துணி போடாமல் 18 வயது மகனை ரூமில் பூட்டி வைத்த பெற்றோர்..!
18 வயது உடைய மாற்றுத்திறனாளி மகனை ஆடைகள் இன்றி கொட்டகையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனை வெளியே அழைத்துச் செல்ல முடியாத காரணத்தினாலும், சிறுவனை யாரிடமும் ஒப்படைக்க முடியாத காரணத்தினால் சிறுவனை வீட்டின் வெளியே உள்ள கொட்டகையில் பூட்டி வைத்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுவனை வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்க தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று, அதற்கான முயற்சியை பஞ்சாயத்து மேற்கொள்ளும் என்றும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





