குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கு நேர்ந்த விபரீதம்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொழுது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பூரணி என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை உடன் முதல் சின்னியம்பாளையத்தில் உள்ள வீட்டில் பூரணி வசித்து வந்தார். இந்நிலையில் பூரணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அவரது கணவர் மதன்குமார் வந்து பார்த்தபொழுது பூரணி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பூரணி சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி வேதனை அளித்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





