--- --:--:-- --

வாடகைதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் மேல் பற்றிக் கொண்ட தீ..!

5

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாடகைக்கு விட்ட கடையை திரும்ப பெற முடியாத ஆத்திரத்தில் வாடகைதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் மீது தீப்பற்றி கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

காந்தி மார்க்கெட்டில் வாடகைக்கு விட்ட கடையை திரும்ப பெறுவது தொடர்பான தகராறில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டை சேர்ந்த ரங்கராஜ் ஒரு லட்சம் ரூபாய்க்கு அவரது கடையை ராஜா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

 

ரங்கராஜனுக்கு தெரியாமல் அவரது தம்பிகள் ராஜாவிடம் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. தம்பிகளிடம் ஐந்து லட்சம் கொடுத்துள்ளதால் கடையை காலி செய்ய அவர் மறுத்துள்ளார். இதனால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

 

Right Menu Icon