--- --:--:-- --

முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா திகழ்கிறது..!

6

லகளவில் முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 

மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்பொழுது மக்களிடையே உரையாற்றியவர் ஒட்டுமொத்த உலக நாடுகளும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா பல துறைகளில் எட்டி புதிய சகாப்தம் படைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா திகழ்வதாகவும் இதனால் முதலீடுகள் குவிந்து நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார்.

 

Right Menu Icon