--- --:--:-- --

தமிழில் சென்டம் அடிச்ச ஒரே மாணவி..!

4

மிழகத்தில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒரேவொரு மாணவி தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் செல்போன் எண்களிலேயே நேரடியாக முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,12,620 ஆகும்.

 

இதில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.38 சதவீதமும், மாணவர்களில் 85.83 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 4,006 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளது. அதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 886 ஆகும்.

Right Menu Icon